பூசணி சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.